முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். சென்னை அண்ணா சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்திற்கு அதிமுக சார்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது “அண்ணாவை ஒருமையில் திட்டி அவருடைய பிறப்பை கிண்டல் செய்து காங்கிரஸ்காரர்கள் சுவரில் எழுதினார்கள்.
தன்னை கேவலப்படுத்திய காங்கிரஸ் கட்சியின் செயலை பொருட்படுத்தாத அறிஞர் அண்ணா, தன் தம்பிகளை அமைதிப்படுத்தி மெழுகுவர்த்தி வெளிச்சம் காட்டி அதனை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு கூறினார். அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் விடியா அரசு என திமுக-வை சாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசியலில் நாகரிகம் பண்பாடு இன்றி எதிர்க் கட்சிகளை ஒடுக்க இன்றைய தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாக தெரிவித்தார். புழுதிவாரி தூற்றி நாகரிகமற்ற அரசியலை செய்யும் திமுக-வுக்கு, அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு அருகதை இல்லை. திமுக-வினர் கம்பி கட்டும் வேலையை நன்றாக செய்கின்றனர்.
திட்டங்களுக்கான பெயர்சூட்டு விழா மட்டுமே பிரமாண்டமாக நடக்கிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர், என் துறைக்கு இயக்குநராக இருந்தவர் தற்போதைய தலைமை செயலாளர் இறையன்பு. ஆகவே அவரது கைவண்ணம் எனக்கு தெரியும். இதனிடையில் முதல்வர் ஸ்டாலின் பாடுவதெல்லாம் அவரது கைவண்ணம்தான். அவர் எழுதிக்கொடுத்தைதை ஸ்டாலின் பேசுகிறார் என திமுக தலைவரை கேலி செய்தார். ஜெயலலிதாவை பார்ப்பதுபோன்று மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா சொல்வது தவறானது ஆகும். சசிகலா நகைச் சுவை உணர்வு அதிகம் கொண்டனர் எனவும் சிரிக்காமல் காமெடி செய்பவர் எனவும் தெரிவித்தார். இந்த ஆட்சியில் முக.ஸ்டாலின், மா.சுப்பிர மணியன் இருவரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் கெட்டிக்காரர்கள்” என்று அவர் ஆளும் காட்சியை விமர்சித்தார்