தற்போது பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர்.
இந்நிலையில் ஏடிஎம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கையில் கவனம் இல்லாவிட்டால் நம் மொத்த வங்கி இருப்பும் பறிபோய்விடும். அதனால் ஏடிஎம் பின்னை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும், ஏடிஎம் உள்பகுதியில் மறைக்கப்பட்ட கேமரா உள்ளதா என்பதை சரிபார்க்கவும்,நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூட ஏடிஎம் பின்னை கூறக்கூடாது, பணம் எடுக்கும்போது யாரிடமும் பேச வேண்டாம், பின் நம்பர் போடும்போது கையை வைத்து மறைத்து போட வேண்டும்,முக்கியமாக பணம் எடுத்த பிறகு கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும்.