தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் பல்வேறு வசதிகளை அரசு அவபோது அமல்படுத்தி வருகிறது.இந்நிலையில் ரேஷன் அரிசியை சாப்பிடாதவர்கள் அதை வாங்க வேண்டாம் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரேஷன் அரிசியை சிலர் வீணடிக்கின்றனர்.ரேஷன் அரிசி சாப்பிடாதவர்கள் அதை வாங்கி அரசியல் நலத்திட்டத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார். மேலும் ரேஷன் கடைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.