Categories
சினிமா தமிழ் சினிமா

“ரவீந்தர், தில் இருந்தா அத மட்டும் செய் பார்ப்போம்”…. வனிதா ஓபன் டாக்….!!!!!!

பணத்திற்காக மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என பேசுவது தவறு என கூறுகின்றார் வனிதா.

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் ரவிந்தர்-மகாலட்சுமி குறித்து கூறியுள்ளதாவது, எல்லாமே பப்ளிசிட்டி. ரவீந்தர் நல்ல மனிதர். அவருடைய சேனலுக்காக பேட்டி கேட்டார். நான் பணம் வாங்காமல் வரமாட்டேன் என கூறினேன். பின் பணம் கொடுத்து கூப்பிட்டதால் நான் சென்றேன். அந்த பேட்டியின் ப்ரோமோவுக்கு வந்த கமெண்டை பார்த்து அந்த பேட்டியை தூக்கிட்டார். தில் இருந்தால், தைரியம் இருந்தால் ரவி இப்போ அந்த பேட்டியை போடு தம்பி என கூறியுள்ளார்.

நானும் ரவியும் நிறைய பேசினோம். அவருக்கு என் வாழ்த்துக்கள். மகாலட்சுமிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அனைவரும் வாழ்க்கையில் தவறு செய்கின்றோம். அவரிடம் அந்த பொண்ணு கண்டிப்பா ஏதோ ஒரு விஷயம் பார்த்து இருக்க வேண்டும். இல்லை என்றால் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கமாட்டார். ரவி வந்து ஊன்னு சொன்னா ஊன்னு பேசுவார். அந்த பொண்ணு பாவம் அழகான பொண்ணு. பணத்துக்காக கல்யாணம் பண்ணுறதுன்னு சொல்வது தவறான விஷயம்.

தயாரிப்பாளர்களிடம் பணம் கிடையாது. ரவியும் அந்த பொண்ணும் நல்லா இருக்க வேண்டும். அவர்களிடம் கேட்கக் கூடாத கேள்விகள் எல்லாம் கேட்கின்றார்கள். பிஸிக்கல் பற்றி கேட்ட கேள்விக்கு கூட ரவி பதிலளித்தார். நான் திருமணத்தை மதிக்கிறேன். வாழ்க்கை துணை கண்டிப்பாக தேவை என கூறியுள்ளார் வனிதா.

Categories

Tech |