Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளில் மேற்கு வங்காளம் தான் முதலிடம் பிடிக்கும்…. அறிக்கை வெளியிட்ட மாநில முதல் மந்திரி….!!!!

மேற்கு வங்காள முதல் மந்திரி மம் தா  பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள காரக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது. வேலை தேடுபவர்களை தொழில் துறையில் இணைப்பதே அரசாங்கத்தின் வேலை. மேலும் அடுத்த5  ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் மேற்கு வங்காளத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் எனது நோக்கம். மேலும் பாலிடெக்னிக் மற்றும் ஐடிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஆனால் நமது நாட்டில் 45 சதவீதம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் 40 சதவீதம் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. விரைவில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக 89 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதனையடுத்து காரக்பூர் தொழில் பேட்டையில் புதிய திட்டத்தில் டாடா  மொட்டாலிக்ஸ் 600 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதனால் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் தியோச்சா பச்சாமி நீலகிரி சுரங்கத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்நிலையில் தான்குனி-அமிர்தரஸ் சரக்கு வழிதடத்தில் பல தொழில்கள் தொடங்கப்பட உள்ளது. இதனால் வேலையில் சேர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனையடுத்து தாஜ் பூர் ஆழ்கடல் துறைமுகம், மால்டா, பாலூர் காட்டி புதிய விமான நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் . மேலும் மாநில முழுவதும் 26 ஹெலிபேய்டுகள் அமைக்கப்பட உள்ளது. ஆனால் மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வீடு வழங்குவதற்கான பங்களார்  பாரி திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |