Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தையை…. தொடங்கியது இலங்கை….!!!!

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இலங்கை நாடு தொடங்கியுள்ளது.

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நாட்டிற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெருமளவில் பொருள் மற்றும் பண உதவி போன்றவற்றை வழங்கி வருகின்றது. அதே நேரத்தில் சர்வதேச நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கு அந்நாடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஆனால் சர்வதேச நிதியமோ வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ள கடன்களை மறுசீரமைத்தால் மட்டுமே கடன் உதவி செய்ய முடியும் என கூறிவிட்டது.

எனவே ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதற்காக லசார்டு என்ற வெளிநாட்டு கடன் ஆலோசனை நிறுவனத்தை இலங்கை நாடியுள்ளது. இந்த நிறுவனமானது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இரு தரப்பு மற்றும் பிற கடன் வழங்குபவர்களின் கடன் மறு சீரமைப்பு குறித்த பேச்சு வார்த்தைகளை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |