Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! பெரியார் சொன்னதை சொல்லி… நோஸ்கட் செய்த எச்.ராஜா… கடும் அப்செட்டில் திமுக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, எனக்கு என்னவோ ஒன்னும் புரியவில்லை. ”வேசி மகன்” ”விபச்சாரியின் மகன்” இது எல்லாத்துக்கும், திமுகவிற்கு என்ன கனெக்சன் ? எங்கு இருந்து வருகிறது ? என்பது பார்த்தீர்கள் என்றால்…  தி.கவிலிருந்து கிழவனுக்கு கன்னிப் பெண் மீது ஆசையா ? என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகளை சொல்லி,  சி. என் அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்றவர்கள் ஈவேராவை விட்டு வெளியே சென்றார்கள்.

அன்றைக்கு ஈவேரா என்ன சொன்னார், என்னை விட்டு வெளியேறுபவர்கள் ”வேசி மகன்கள்”. பெரியார் இதையும் சொல்லியிருக்கிறார்.  ஏனென்றால் பெரியாரின் உளறல்களுக்கு எல்லையே கிடையாது, பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார், அதையும் சொல்லுங்க. அது மட்டுமல்ல, ஜின்னாவுக்கு பெரியார் எழுதிய கடிதம் என் கையில் வைத்திருக்கிறேன்.. நீங்கள் முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் கேளுங்கள், நான் திராவிடர்களுக்காக திராவிடஸ்தான் கேட்கிறேன்.

உங்களுடைய பாகிஸ்தான் கோரிக்கை மாநாட்டிற்கு நான் வருகிறேன், என்னுடைய திராவிடஸ்தான் கோரிக்கை மாநாட்டு சென்னையில் நடக்கிறது. அதற்கு நீங்கள் வாங்கள் என்று பெரியார் சொன்னார். ஆனால் ஜின்னா தெளிவாக எழுதினார் கடிதம்…  ஜின்னாவிற்கு ஈவேரா கடிதம் எழுதி,  அதில் என்னவென்று கையெழுத்து போட்டு இருக்கிறார்… நான் ஆதாரம் வச்சு இருக்கேன். ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்று தான் எழுதி இருந்தார்.

ஆனால் உங்கள் கோரிக்கையை ஜின்னா ஏற்றுக் கொள்ளவில்லை, நீங்கள் என்ன வேண்டுமானாலும் கோரிக்கை வையுங்கள் ? என்ன வேண்டுமானாலும் மாநாடு நடத்துங்கள் ? நான் வரமாட்டேன் என்று ஜின்னா அதற்கு பதில் எழுதினார். ஆகவே ஈவேராவின் உளறல்களை வைத்துக் கொண்டு, ஹிந்து மதத்தை அசிங்கப்படுத்துவது அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

Categories

Tech |