இந்தியாவில் பல ஆன்லைன் கேம்கள் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் ஒரு சில கேம்களில் பணத்தைக் கட்டி விளையாடும் விளையாட்டு இருப்பதால் அதில் குழந்தைகள் பெற்றோர்களின் பணத்தை எடுத்து அதில் கட்டி விளையாடி வருகின்றன. இது போன்ற விளையாட்டுகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய சட்டம் வகுத்துள்ளதாகவும், இது விரைவில் வர உள்ளதாகவும், இதற்காக வல்லுனர் குழு அமைத்து வரைவு திட்டம் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திறமை கொண்டு விளையாடினால் மட்டுமே அது விளையாட்டு என்றும், இல்லையெனில் அது சூதாட்டம் என்றும் வரைவுரை கூறுகிறது. ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி பணத்தை இழக்கும் பலர் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் அரசின் இந்த திட்டம் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.