தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிம்புவின் நடிப்பு, ஏ.ஆர். ரகுமானின் இசை, கௌதம் மேனனின் இயக்கம் என அனைத்தும் சிறப்பாக படத்தில் அமைந்துள்ளது என்று விமர்சனங்கள் வருகின்றன. ஒரு சாதாரண மனிதன் எப்படி டான் ஆகிறான் என்பதுதான் “வெந்து தணிந்தது காடு” பாடத்தின் ஒரு வரி கதை. இந்த கதையை சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு காட்சியில் சொல்லி இருப்பார். தற்போது அந்த காற்று தான் இணையதளத்தில் செம வைரல் ஆகி வருகிறது. கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் வெளியான முதல் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு சாதாரண மனிதன் டான் ஆவதுதான் படத்தோட கதை என ஒரு வசனம் பேசி இருப்பார். எனவே அதே கதை கருவில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்திருப்பதால் அந்த காட்சி தற்போது ட்ரெண்டாகி வருகிறது.