Categories
உலக செய்திகள்

மகாராணியின் உடலுக்கு 24 மணிநேர பாதுகாப்பு… பணியின் போது மயங்கி விழுந்த காவலர்…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடலை 24 மணி நேரங்களும் மெய்காப்பாளர்கள் பாதுகாத்து வரும் நிலையில், ஒரு காவலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் மகாராணியார், கடந்த 8-ஆம் எட்டாம் தேதி அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் மரணமடைந்தார். அவரின் உடலை அரண்மனையிலிருந்து நேற்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் என்ற அரண்மனைக்கு கொண்டு சென்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது. அதுவரை, அந்த அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கிறது. 24 மணி நேரங்களும் மகாராணியின் உடலை பாதுகாக்க மெய்க்காப்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

https://twitter.com/Jack_Thompson_8/status/1570194725847633920

மக்கள் இலட்சக்கணக்கில் வரிசையில் காத்திருந்து, மகாராணி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மகாராணியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிற்கு அருகே கண்காணிப்பு பணியை மேற்கொண்டிருந்த ஒரு காவலர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதனால் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் ஓடிச்சென்று அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |