பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்களின் ரகசிய விஷயங்களை அவ்வப்போது ஒளிவு மறைவு இல்லாமல் கூறி வருகிறார். அந்த வகையில் நடிகர் வாணி போஜன் பற்றிய ஒரு பரபரப்பு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் நடிகை வாணி போஜன் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டு கெதரில் இருப்பதாக பரபரப்பு குற்ற சாட்டை கூறியுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியிருப்பதாவது, நடிகர் ஜெய் தேவாவின் தம்பி தம்பி மகன். இவர் நடித்த சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் முதலில் சாந்தனுவை தான் நடிக்க வைக்க சசிகுமார் திட்டமிட்டு இருந்தார். ஆனால் நடிகர் பாக்யராஜும், சாந்தனவும் அருகில் இருந்து கொண்டே கதையில் அதை மாற்றுங்கள் இதை மாற்றுங்கள் என்று கூறியது சசிகுமாருக்கு பிடிக்கவில்லை.
இதன் காரணமாக சசிகுமார் என்னுடைய கதை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை நீங்கள் விருப்பப்பட்டால் நடிங்கள் என்று கூறிவிட்டார். அதன் பிறகு தான் சசிகுமார் நடிகர் ஜெய்யை சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டார். ஆனால் நடிகர் ஜெய்க்கு இசையமைப்பாளராக மாற வேண்டும் என்பதுதான் ஆசை. இருப்பினும் நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததால் ஜெய் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் ஜெய் அஞ்சலியை காதலித்தார். 2 பேரும் லிவிங் டு கெதரில் இருந்தபோது ஜெய்க்கு போதை பழக்கம் அதிகமாகவே, அஞ்சலி பலமுறை போதை பழக்கத்தில் இருந்து வெளியே வரும்படி ஜெய்யிடம் கூறியுள்ளார். ஆனால் ஜெய் அதை கண்டு கொள்ளவே இல்லை.
ஒரு நாள் ஜெய் அதிக போதையில் வாகனத்தை ஒட்டியதால் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனால் அஞ்சலியும், ஜெய்யும் பிரிந்து விட்டனர். அதன்பின் ஹைதராபாத்துக்கு சென்ற அஞ்சலி சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால் அவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஜெய்க்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இந்நிலையில் நடிகர் ஜெய் மற்றும் வாணி போஜன் ஒரு வெப் சீரிஸில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து தற்போது லிவிங் டு கெதர் லைப்பில் இருக்கின்றனர். இதனால் வாணி போஜனுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது.
ஆனால் வாணி போஜன் என்னிடம் இயக்குனர்கள் கதை சொல்கிறார்கள் என்கிறார். ஆனால் ஒரு இயக்குனர் நான் வாணி போஜனுக்கு கதை சொன்னேன். அவர் பிடிக்கவில்லை என்று கூறி விட்டார். மற்றொரு கதையும் சொன்னேன். அந்த கதையும் பிடிக்கவில்லை என்று கூறி விட்டார். அப்போது வாணி போஜனுடன் ஜெய் இருந்தார். ஜெய் சம்மதம் சொன்னால் தான் வாணி போஜன் ஒப்புக்கொள்கிறார் என்றார். சமீபத்தில் வாணி போஜன் இணையதளத்தில் உஷாராகி விட்டேன் என்று பதிவு செய்திருந்தார். இதற்கு என்ன அர்த்தம் என்பது தெரியவில்லை என பயில்வான் ரங்நாதன் கூறியிருந்தார்.