தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதற்கு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 2017ல் பத்திரப்பதிவு வன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அங்கீகாரம் இல்லாத மனை பத்திரம் பதிவு குறித்து மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய மறுக்க பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.