ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளத்தாமங்களம் வடக்கு தெருவில் சாயிராம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உப்புகாரன் ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தை சாயிராம் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சாய்ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு சாய்ராமின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வளந்தாமங்கலம் மெயின் ரோட்டில் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.