சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் பகுதியில் ராமன்(42) என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவர் அக்குபஞ்சர் சிகிச்சை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை கொடுத்து சிகிச்சை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி தேவகோட்டை மருத்துவ அதிகாரி டாக்டர் செங்கதிர், சிவகங்கை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்க்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ராமன் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமனை கைது செய்தனர்.