Categories
அரசியல்

“2024-ம் ஆண்டு தேர்தலில்” அமைச்சர் போடும் திட்டம்….. கொங்கு மண்டலத்தில் திமுக நினைத்தது நடக்குமா…..? காத்திருக்கும் ட்விஸ்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் படு தோல்வியை சந்தித்தது. இருப்பினும் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்றதால் திமுக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கொங்கு மண்டலத்தின் தோல்வியை  முதல்வரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் முதல்வர் ஸ்டாலினால் செந்தில் பாலாஜி கோவை மாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.‌ அமைச்சர் செந்தில் பாலாஜியை களப்பணியில் அடித்துக் கொள்ள யாராலும் முடியாது  என்கிற அளவுக்கு கோவையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

இவர் கோவை மாவட்ட நிர்வாகியாக நியமிக்கப்பட்டதன் பலனாக  மாற்று கட்சியில் இருந்து 50,000 பேர் திமுக கட்சியில் இணைந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும்  நல்ல பலன் கிடைத்ததால் வருகிற 2024-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு களப்பணிகளை முடுக்கி விட மேலிடம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் மேலிடத்தின் உத்தரவின் பேரில் திமுக கொடியை நாட்டுவதற்கான வேலையை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவிக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த அதிமுக ஆட்சியின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனத்தில் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் பணத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் பணத்தை கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி வழக்கை வாபஸ் பெற வைத்ததால் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை வாபஸ் வாங்கினாலும் குற்றம் குற்றம் தான் என்று கூறி வழக்கை தொடர்ந்து உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஒருவேளை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் அவருடைய அமைச்சர் பதவி பறிபோவதோடு, வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் அவரால் நிற்க முடியாத நிலையும் ஏற்படும். இதன் காரணமாக மின்சார துறை அமைச்சர் பதவிக்கு அடுத்து யார் வருவார்? கொங்கு மண்டலத்தில் திமுக கொடி நாட்டப்படுமா? என்ற பல்வேறு கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. மேலும் எல்லா கேள்விகளுகமான பதில்களை காலம் தான் முடிவு செய்யும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

Categories

Tech |