கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கிறது. முன்பே இந்த மூவர் கூட்டணியில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களின் வரவேற்பை அடுத்து “வெந்து தணிந்தது காடு” படத்தின்மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது அதிகரித்து உள்ளது.
இத்திரைப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படம் இன்று தமிழகம் முழுதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. ரசிகர்கள் இதை விழாக் கோலமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் திரைபிரபலங்கள் பலரும் படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தன் சமூகவலைதளப்பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யா வெளியிட்டுள்ள பதிவில் “படத்தை பற்றி நல்ல செய்திகளை கேள்விபடுகிறேன். நானும் படம்பார்க்க காத்திருக்கிறேன். இந்த படம் மாபெரும் வெற்றி பெறுவதற்கு என் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். அதன்பின் சிம்பு, சூர்யாவின் வாழ்த்துக்கு “மிக்க நன்றி அண்ணா” என பதிவிட்டுள்ளார்.
Thank you soo much anna @Suriya_offl really means a lot ❤️🤗 https://t.co/L2V9wcrcnt
— Silambarasan TR (@SilambarasanTR_) September 15, 2022