தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மாவட்டத்தில் நவ்காம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிசூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 2 தீவிரவாதி களிடமிருந்தும் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் போன்றவைகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. மேலும் வேறு ஏதும் தீவிரவாதிகள் நடமாட்டம் அப்பகுதியில் இருக்கிறதா என்பதை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எப்போதுமே பதற்றத்துடன் காணப்படும் ஜம்மு காஷ்மீரில் திடீரென தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.