Categories
தேசிய செய்திகள்

VIP தரிசனம்: திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17 ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. அன்றையதினம் கொடியேற்றத்துடன் விழா துவங்க இருக்கிறது. இந்த விழாவின்போது அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான அரசு பட்டு வஸ்திரங்கள் அளிக்கப்பட இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. இந்த விழா நாட்களில் கோவிலின் மாடவீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் விழாவில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் மாடவீதிகளில் சுவாமி உலா நடைபெறவில்லை. இந்த வருடம் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு இருப்பதால் சுவாமி வீதிஉலா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி நடப்பாண்டு 17 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மோற்சவ விழாவில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் செப்டம்பர் 20 ஆம் தேதியன்று திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்துசெய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அத்துடன் இலவச தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் குறைவான தங்கும் அறைகள் இருப்பதால் அவைகளில் 50 சதவீதம் ஆன்லைன் வாயிலாகவும் மீதமுள்ளவர்கள் நேரடியாக கவுண்டர்கள் மூலமாகவும் ஒதுக்கீடு செய்யப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இந்த பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 17 – அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதால் பக்தர்கள் சென்றுவர ஏதுவாக சுமார் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து திருப்பதி- திருமலை இடையில் மின்சார பேருந்து இயக்கப்பட இருக்கிறது.

Categories

Tech |