பெண்ணை கவர்வதற்கு இளைஞர் ஒருவர் அவருடைய ஷுவை கையில் எடுத்து பசை வைத்து ஒட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மைய நாட்களாக பல சுவாரசியமான காணொளிகள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது இளைஞர் ஒருவரின் செயல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி உள்ளது. அந்த காட்சியில் பெண் ஒருவரின் பிஞ்சுபோன ஷுவை அந்த இளைஞர் சரிசெய்கிறார்.
சம்மந்தப்பட்ட பெண் பக்கத்தில் நின்று இளைஞரின் தோள் மீது கையை வைத்துக் கொண்டு தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இதனை பார்த்த பெரும்பாலானவர்கள் இருவருக்கும் இடையில் காதல் எனவும் அதனால் தன் காதலியின் காலணியை சரிசெய்வதற்கு பொதுஇடத்தில் இவ்வாறு அமர்ந்து இந்த வேலையை செய்துள்ளதாக கூறிவருகின்றனர்.