கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு திரும்பவும் அழைக்கின்றன. சில நிறுவனங்கள் பணியாளர்களின் தேவைக்கு மட்டுமே அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்த நிலையிள் அமேசான் சில ஊழியர்களை வீட்டில் இருந்து சிறிது நேரம் வேலை செய்ய அனுமதிக்கிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அமேசன் நிறுவனம் திரும்பும்படி கட்டாயப்படுத்தாது.
எல்லோரும் மீண்டும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. பணி சூழல் போன்றவற்றை பரிசீலித்த பிறகு இது குறித்து முடிவெடுக்கப்படும். வன்பொருள் அல்லது படைப்பாற்றல் பிரிவுகளில் பணிபுரிவர்கள் பெரும்பாலானவர்கள் அலுவலகங்களுக்கு திரும்ப வரவேண்டும். ஆனால் பொறியாளர்கள் உட்பட மற்றவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று தெளிவுபடுத்தி உள்ளார். கடந்த 2 வருடங்களாக கொரோனா காலத்தில் அமேசான் தன்னுடைய ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.