Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம் – போலீஸ் விசாரணை

கல்லூரிக்கு சென்ற பெண் காணவில்லை என பெற்றோர் வழக்குகள் தொடுத்துள்ளனர்

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் செந்துறை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகள் தமிழரசி. இவர் தத்தனூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். தமிழரசி வழக்கமாக கல்லூரி பேருந்தில் தான் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். என்றும் போல் அன்றும் கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தமிழரசியை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத தமிழரசியை  காணவில்லையென காசிநாதன் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் செந்துறை சப்-இன்ஸ்பெக்டர் தனஞ்செழியன் வழக்குப்பதிந்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்.

Categories

Tech |