சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி உட்பட 21 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். போக்சோ தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் 21 பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த 21 பேருக்கான தண்டனை விவரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் விபரங்கள் சாயிதா பானு, சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா ஆகிய ஏழு பெண்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் மாரீஸ்வரன் என்பவர் மரணம் அடைந்ததால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. 2020 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.