Categories
சினிமா

வீரப்பன் வெப் தொடருக்கு…. தடை விதிக்க கோரி வழக்கு…. வெளியான தகவல்….!!!!

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை “வனயுத்தம்” எனும் பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் படமாக இயக்கினார். இவர் தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப்தொடராக இயக்கி வருகிறார். இவற்றில் வீரப்பன் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் துவங்கியுள்ளது.

இதில் வீரப்பனை வேட்டையாடும் காவல் அதிகாரி ஆக விவேக்ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்றஉளவியல் நிபுணராக டைரக்டர் ரமேஷ் மகள் விஜேதாவும், நடிகர் ராஜ்குமார் வேடத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய  மொழிகளில் இத்தொடர் உருவாகிறது. வெப்தொடருக்கு தணிக்கையில்லை என்பதால் வீரப்பனின் முழுவாழ்க்கையையும் இத்தொடரில் கொண்டுவருவேன் என இயக்குனர் ரமேஷ் கூறினார். இந்நிலையில் இத்தொடருக்கு தடை விதிக்கக் கோரி வீரப்பன் மனைவி முத்து லட்சுமி தரப்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், இவ்வழக்கை சட்டப்படி சந்திப்பேன் எனவும் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்து இருக்கிறார்.

 

Categories

Tech |