Categories
சினிமா தமிழ் சினிமா

இளவரசே! “நான் வீடியோ காலில் இளவரசியிடம் பேசி விடுகிறேன்” ஆதித்ய கரிகாலனின் அழைப்புக்கு வந்தியத்தேவனின் பதில்….. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.அதில் சரி தஞ்சைக்கு வருகிறேன். எட்டுத்திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண் மொழியையும் இழுத்து வா என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நடிகர் கார்த்தி பதில் அளித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இளவரசே  உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. நான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகிறேன். வீடியோ காலில் இளவரசியிடம் பேசி சாரி சொல்லி விடுகிறேன். தயவுசெய்து மன்னிக்கவும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை வைத்து திரிஷா, கார்த்தி மற்றும் விக்ரம் ஆகியோர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் போடும் பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Categories

Tech |