புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுக்கு மரியாதை செலுத்த செலுத்துவதற்கு ஒதுக்கியிருந்த நேரத்தில், மற்ற அமைப்பினரை உள்ளே விடுகிறார்கள். எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் தானே வரவேண்டும் என தெரிவித்தவர். மேலும் தென் தமிழகத்தில் உங்களுக்கு எல்லாம் தெரியும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவுபெரிய சாதி மோதல் வந்தது. அவையெல்லாம் முற்றாக ஒழிக்கப்பட்டு, மிகப்பெரிய சமூகசமநிலை நிலவுகிற இந்த நேரத்தில்,
அரசியல் ரீதியாக எங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். நாங்கள் கொடுத்த மனுவினுடைய சாராம்சமே இது தான். உங்களுக்கு ஒரு நேரம் ஒதுக்கப்பட்டால் அந்த நேரத்தில் நான் வரக்கூடாது. எனக்கு ஒரு நேரம் ஒதுக்கப்பட்டால் அந்த நேரத்தில் யாரும் வரக்கூடாது.ஒருவர் இல்லை, பல பேர் உள்ள வராங்க. நான் தனிப்பட்ட முறையில் யார் உள்ளே வந்தாலும், அனுமதிக்க கூடாது. நாங்கள் தான் 1993 முதல்முறையாக வந்து தியாகி இம்மானுவேல் சேகரனார் மறைவிடத்திற்கு சென்று, அங்கிருந்த முட்புதர்களை சுத்தப்படுத்தி, முதல் முறையாக ஆரம்பிச்சு வச்சோம்.
நாங்க மட்டும் தான் தொடர்ச்சியாக, கடந்த 30 ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இதில் யாரையும் குறுக்கீடு விடக் கூடாது. இது வந்து எங்களுடைய நிகழ்ச்சி, புதிய தமிழகம் கட்சியினுடைய நிகழ்ச்சி. தாமிரபரணி நிகழ்ச்சியானாலும், தியாகி இம்மானுவேல் சேகரனார் நிகழ்ச்சி ஆனாலும் அது புதிய தமிழகம் கட்சியினுடைய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வேறு யாரையும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் விடக்கூடாது. முதலில் எல்லாரும் வரட்டும். அதுல ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேறு யாரையும் உள்ளே விடக்கூடாது என்பதுதான் எங்களுடைய முக்கியமான கோரிக்கை என தெரிவித்தார்.