Categories
மாநில செய்திகள்

நடப்பு கல்வியாண்டில்….. பொது காலாண்டு தேர்வு கிடையாது….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்படாமல் தவிர்க்க மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் இந்த முறை அனைத்து பொது தேர்வுகளும் கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாநில அளவிலான பொது காலாண்டு தேர்வு நடைபெற வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்குரிய கால அட்டவணை மாறுபட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் வரும் 30-ம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |