Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய்-மகன் மாயம்… போலீஸ் விசாரணை

காணாமல் போன தாயையும் மகனையும் போலீசார் தேடி வருகின்றனர்

களக்காடு நாங்குநேரி சாலையில் கடை வைத்திருப்பவர் கருணதாஸ் அவரது மகன் ஜான் மற்றும் இவர்களுடன் ஜானின் சகோதரி சுஜாவும் தங்கியிருந்தார். கடந்த 12ஆம் தேதி தனது 4 வயது மகன் உடன் களக்காடில்  இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானின் மனைவியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சுஜா வீடு திரும்பாத நிலையில் ஜான் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு மனைவியிடம் விசாரித்துள்ளார்.

அப்பொழுது சுஜா மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு செல்லவில்லை என  தெரியவந்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்து பல இடங்களிலும் சகோதரியையும்  சகோதரியின் மகனையும் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் இச்சம்பவம் குறித்து களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஜான். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து மகனுடன் காணாமல் போன சுஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |