Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்து மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட குரங்கு….. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

இறந்த குரங்குக்கு இந்து மதம் முறைப்படி இறுதி சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் போஸ் பஜார் பகுதியில் நேற்று குரங்கு ஒன்று  உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்கள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்து கிடந்த குரங்கை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ராமநாயக்கன் ஏரி அருகே இந்து மத முறைப்படி இறந்த குரங்குக்கு இறுதி சடங்கை நடத்தியுள்ளனர். மேலும் 6 அடி பள்ளத்தில் குரங்கின் உடலை அடக்கம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் குரங்கிற்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். இதில் அந்த அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |