தூத்துக்குடி மாவத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் ரதம் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Categories
“முத்தாரம்மன் ரத வீதி விழா” திரளான பக்தர்கள் தரிசனம்….!!
