இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான செலவுகள் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் பொழுது அதிகமாக தான் இருக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள் பக்கத்து நாடுகளுக்கு சென்று மருத்துவ படித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியாவில் நேரடியாக மருத்துவ பணிகளை தொடர முடியாது l. இதற்காக பல கட்டுப்பாடுகளும் உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக மாணவர்கள் அதிக அளவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள்..
இதனை தவிர்க்க வேண்டும் என்று பல காலமாக கோரிக்கையை வைக்கப்பட்டது. இதனால் தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ படிப்பில் மொத்தமுள்ள இடங்களில் 50% மாணவர்களிடமிருந்து அரசு மருத்துவக் கல்லூரி வசூலிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பை எந்த மாநிலத்திலும் இன்னும் அமல்படுத்தாத நிலையில் தற்போது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ படிப்பிற்கான எண்ணிக்கையில் 50% அளவிற்கு அரசு நிர்ணயத்தை கட்டணத்தை மத்திய பிரதேச மாநிலம் முதல் முறையாக அமல்படுத்தியுள்ளது.