ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹசியை பயிற்சி ஆலோசகராக பணியமர்த்துவதற்கு அந்த இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரை வென்று நடப்பு சாம்பியன் ஆக வெற்றி நடைபோடும் ஆஸ்திரேலியா அணி இந்த முறை சொந்த மண்ணில் களமிறங்குவதால் கூடுதல் பலத்துடன் இருக்கிறது என்றே சொல்லலாம்.. அதுமட்டுமில்லாமல் அவர்களது அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பதால் ஆஸ்திரேலியா இந்த முறை கோப்பையை தக்க வைக்க வியூகங்களை வகுத்து வருகிறது..
அதே நேரத்தில் மற்ற அணிகளும் இந்த முறை டி20 உலக கோப்பையை தட்டி தூக்க வேண்டும் என்று தங்களது அணியில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது.. அந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ஜாஸ் பட்லர் தலைமையில் உலகக் கோப்பையை எதிர்கொள்ள இருக்கிறது.. சமீபத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லர் நியமிக்கப்பட்டார்.. இவரது தலைமையில் அந்த அணி சிறப்பாகவே ஆடி வருகின்றது.. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹசியை பயிற்சி ஆலோசகராக பணியமர்த்துவதற்கு அந்த இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மைக்கேல் ஹசியின் வருகை நிச்சயமாக இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய பலத்தை கொடுக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதியாக நம்புகிறது.. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய மைக்கேல் ஹசி நல்ல அனுபவம் வாய்ந்தவர் மட்டுமின்றி ஆஸ்திரேலியா ஆடுகாலங்களில் நன்றாக ஆடி அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார்
மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஹசி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்து வருகின்றார்.. இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணியின் பயிற்சி ஆலோசகராக மைக்கேல் ஹசி நியமிக்கப்பட்டுள்ளார்.. ஆஸ்திரேலிய மைதானங்களில் இங்கிலாந்து வீரர்கள் திறம்பட செயல்படுவதற்கு ஹசியின் ஆலோசனை பெரும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது..
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்த பின் அந்த அணி வீரர்களுடன் இணைந்து மைக்கல் ஹசி பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.