பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணியால் நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோன்றப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் நாகர்கோவில் காவல் நிலையம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை இருக்கும் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணியானது நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து பொக்லைன் எந்திரங்கள் மூலமாக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் காவல் நிலையம் பகுதியில் சாலையில் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டிருக்கின்றது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.