Categories
தேசிய செய்திகள்

விருஷசேனன் வேடம் போட்டு நாடகம் நடத்திய இன்ஸ்பெக்டர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!

விருஷசேனன்  வேடம் போட்டு நாடகம் நடத்திய இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தார்வார் மாவட்டத்தில் உள்ள உப்பள்ளி பகுதியில் தற்போது   தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தெருக்கூத்து கலைஞர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து, கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு அம்சங்களை குறித்து நடித்து காட்டியும்,  பாட்டு பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான காலிமிர்ச்சி என்பவர் கர்ண பருவா எந்த நாடகத்தில் கர்ணனின் மகன் விருஷசேனன்   வேடத்தில் நடித்து அசத்தினார். இதனை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவரை பலரும்   பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |