பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து தங்களது நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து தங்களது நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றும் திட்டமில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத்தின் மறைவிற்கு நியூசிலாந்தை குடியரசு நாடாக அறிவிப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் நாட்டை குடியரசு நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கும் திட்டம் அரசுக்கு இல்லை காரணம் அதைவிட முக்கியமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
நியூசிலாந்து என்றாவது ஒருநாள் குடியரசு நாடாகும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எனது வாழ்நாளுக்குள் நாட்டை குடியரசு நாடாக பார்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டியதற்கான தேவை தற்போது இல்லை” என்று அவர் கூறியுள்ளார். மேலும் பிரிட்டன் காலனி ஆதிக்கத்திலிருந்த நியூசிலாந்தின் தற்போது ஜனநாயக ஆட்சி நடைபெற்றாலும் அது இன்னும் குடியரசு நாடாகவே உள்ளது. நியூசிலாந்து அரசின் தலைவராக பிரதமர் இருந்தாலும் நாட்டின் தலைவராக இதுவரை பிரிட்டன் மகாராணி இருந்து வந்தார் தற்போது மகாராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து நாட்டின் புதிய தலைவராக மன்னர் சார்லஸ் ஆகியுள்ளார். இந்த சூழ்நிலையில் நியூஸிலாந்தை குடியரசு நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பிரிட்டன் காலனி ஆலிக்கத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்றால் நியூசிலாந்து குடியரசு நாடாக மாற வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஏராளமான நியூசிலாந்து மக்களின் அன்புக்குரிய மகாராணி எலிசபெத் மறைந்த நிலையில் அதற்கு இதுதான் சரியான தருணம் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நாட்டை குடியரசு நாடாக உடனடியாக மாற்றம் திட்டம் இல்லை என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். மேலும் மகாராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து நியூசிலாந்து மட்டுமின்றி ஆஸ்திரேலியா கனடா ஜமைக்கா போன்ற 13 நாடுகளின் தலைவராக மன்னர் சார்லஸ் ஆகியுள்ளார்.