தேவாலயங்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்காக 2016-17 வருடம் முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயம் 10 வருடங்களுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிடத்தில் கூடாது. சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்டிருந்தால் மறுமுறை நிதி உதவி ஐந்து வருடங்களுக்கு பின்னரே வழங்கப்படும். இந்த விண்ணப்பமானது [email protected] என்ற இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த விண்ணப்பங்களானது பரிசீலிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும். நிதி உதவி தொகை 2 தவணைகளாக தேவ ஆலயத்தின் வங்கி கணக்கில் மின் பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்படும். ஆகையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள் பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார்.