செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, அருமை அண்ணன் தினகரன் தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார். அதே போல ஓபிஎஸ் மிக சிறந்தவராக இருந்தால் தனியா போய் விடலாம். 99% அதிமுக இரட்டை இலை சின்னத்தோடு மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சின்னமா அவர்களும் அதிமுகவுடன் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும், திமுகவுடன் எந்த தொடர்பு இல்லாமல் இருக்கணும்.
எடப்பாடியார் தலைமை தான் திமுகவை எதிர்க்க வலிமை மிக்க சக்தி என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற சக்தி எடப்பாடியாரை அவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். திமுகவோடு எந்த தொடர்பு இல்லை என்ற சூழ்நிலை உருவாக வேண்டும். எடப்பாடியாரை மக்கள் ஆதரிக்கிறார்கள், திமுகவை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி எடப்பாடியார் என்பது எல்லோரும் உணர்ந்து இருக்கிறார்கள். அதிமுகவில் புதிதாக யாரையும் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மின்கட்டண உயர்வுக்கு நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திருக்கிறோம். மின்கட்டண உயர்வு மட்டும் அல்ல, வீட்டு வரியும் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் மத்திய மின்சார வாரியத்தில் இருந்து மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வந்த போதும், புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி, எடப்பாடி காலத்திலும் சரி, மின்சார கட்டணத்தை உயர்த்துவதை தவிர்த்து வந்தார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழகம் மின் கட்டணத்தை உயர்த்துவதால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.