Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ விதிமுறைகளை மாற்ற அனுமதி…. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் பதவியில் தொடரும் ஜெய்ஷா, கங்குலி…..!!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்கள், பிசிசிஐ போன்றவற்றில் நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று கூறி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஒருவர் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால் அடுத்து 3 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தான் பதவியில் அமர வேண்டும் என்ற விதி இருக்கிறது. இந்த விதியை மாற்றுவதற்கு அனுமதித்தரமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ இன் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மாநில கிரிக்கெட் சங்கங்களில் 6 வருடங்கள் மற்றும் பிசிசிஐயில் 6 வருடங்கள் என நிர்வாகிகள் தொடர்ந்து 12 வருடங்கள் பதவி வகிக்க முடியும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு பிசிசிஐயில் ஒருவர் 1 பதவியில் 2 முறை தலா 3 ஆண்டுகள் வரை பதவி வகிக்கலாம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் பதவியில் தொடர முடியும்.

Categories

Tech |