Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நாங்க வேலையில ரொம்ப சின்சியர்….. வாரம் 6 நாட்கள் லீவ்….. 1 நாள் திருட்டு….. வைரல் சம்பவம்….!!!

செஞ்சியை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற இளைஞர் வாரத்தில் 6 நாள் ஓய்வு எடுத்து விட்டு, ஒரு நாள் மட்டும் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது அவர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர். தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு மனைவி பிரிந்து சென்றுள்ளார். பிறகு தனியாக வாழ்ந்து வந்த இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆறு நாட்கள் வேலைக்கு செல்லும் இவர் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Categories

Tech |