முதல்வர் தலைமையின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் படி நல்ல ஊதியத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. யுஜிசி ஊதிய விகிதத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய தொகை வழங்கப்படும் அது மட்டுமல்லாமல் தற்போது பணிபுரியும் கூடுதல் ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதலாக ரூபாய் 33600 அதிகரிக்கப்படுவதோடு 1200 பணியிடங்களை நிரப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட அனைத்தையும் அரசு அக்டோபர் 1, 2022 முதல் அமல்படுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விதிகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செயலுக்கு வந்த பிறகு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் தீரப் போகிறது. அது மட்டுமல்லாமல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதன் மூலமாக அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய தொகை கிடைக்கப் போகின்றது.
இது பற்றி அரசு தரப்பில் கூறும் போது பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு ஊதிய விகிதத்தில் திருத்தம் செய்யப்பட்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இந்த திருத்தத்தின் மூலமாக அவர்களின் சம்பளம் 20 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் வரை உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை மாதம் 33,600 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான 2 வருடங்களுக்கு யூஜிசி மூலம் அங்கீகரிக்கப்படாத கூடுதல் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் கிடையாது. மேலும் 70 வயது வரை உள்ள ஊழியர்களும் விசிட்டிங் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றார்கள் அவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.