Categories
தேசிய செய்திகள்

பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா…..? அப்ப இத மட்டும் செய்யுங்க…. ஈஸியா வேலை முடிஞ்சுரும்…..!!!!!

இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தால் சர்வதேச பயண நோக்கத்திற்காக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட்டை காலாவதி தேதி முடிவடைவதற்கு முன்பாகவே புதுப்பிக்க வேண்டும்.  பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

அதற்கு பாஸ்போர்ட் கேந்திரா அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான passportindia.gov.in என்ற முகவரிக்குள் சென்று படிவம் 2-ஐ பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த படிவத்தை ஆன்லைனில் நிரப்பினால் நிர்வாகப் பிரிவு பகுதியில் உள்ள பாஸ்போர்ட் மறு வெளியீடு என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து change in exciting personal என்பதை கிளிக் செய்து பொருத்தமான தேர்வை தேர்ந்தெடுத்த பிறகு, தேவையான ஆவணங்களுடன் படிவம் மற்றும் கட்டணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து விண்ணப்பதாரரால் குறிக்கப்பட்ட நிபுணரின் கையெழுத்தை சமர்ப்பித்த பிறகு, தேவையான மாற்றத்துடன் பாஸ்போர்ட் வந்துவிடும்.

Categories

Tech |