பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமின்றி நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் நடித்த பேச்சுலர், ஐங்கரன், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்போது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் “வணங்கான்” படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
View this post on Instagram
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷின் புது பாடல் வெளியாகியுள்ளது. ஒரு நிமிட மியூசிக் வீடியோவாக உருவாகியுள்ள இப்பாடல் ஜி.வி. பிரகாஷ் குரலில் மிகவும் துள்ளலான இசையுடன் சமூகவலைதளத்தை ஆகிரமித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.