இன்று மொத்தம் 308 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றன. பேருந்து, டாக்ஸி, பைக், விமானம் போன்றவற்றை விட ரயில் பயணம் பாதுகாப்பாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கும். கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதால் பெரும்பாலான மக்கள் ரயில்களிலேயே பயணம் செய்கின்றனர். இதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்த ரயில் ஓடுகின்றன. அன்றைய நாளில் எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
இதன் மூலம் சிரமமில்லாமல் விரும்பிய இடத்திற்கு விரும்பிய ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். பல காரணங்களுக்காக இன்று 308 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்பு, பராமரிப்பு பணி, மோசமான வானிலை போன்ற பல காரணங்களுக்காக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அது மட்டும் இல்லாமல் 18 ரயில்களின் தொடக்க ஸ்டேஷன் மாற்றப்பட்டுள்ளது. 49 ரயில்கள் கடைசி ஸ்டேஷன் மாற்றப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் முழு தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.