Categories
மாநில செய்திகள்

என்ன? ஒரு வாரத்தில் இவ்வளவா….?‌ ரூ. 5.21 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் வழங்கப்படும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுப்பதற்காக குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு கடத்தல், பதுக்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரையில் 5,21,969 ரூபாய் மதிப்புள்ள 924 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |