Categories
மாநில செய்திகள்

கோயில் திருவிழா….. “ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடை”…… ஐகோர்ட் கிளை உத்தரவு….!!!!

குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிபரப்பவும் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகள் கொண்டாடப்படாமல் இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. வருகின்ற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்க உள்ளது. தசரா திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வேஷம் போடும் பக்தர்களுக்கு கிரீடம், கண்மலர், நெத்தி பட்டை, வீரப்பல், இடுப்பு ஒட்டியானம்,  கைபட்டை சூலாயுதம் போன்றவற்றை எடுத்து வருவார்கள்.

வேடமணியும் பக்தர்களுக்கான அலங்கார பொருட்கள் தயாரிப்பதில் உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிபரப்பி ஆட்டவும் இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: “குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிபரப்பி ஆடவும் இடைக்கால தடை விதிக்கப்படுகின்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவிழாவிற்கு நேரில் சென்று பக்தி பாடல்கள் அல்லாத மற்ற பாடல்கள் ஒலிபரப்பாகி வருகின்றதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |