Categories
தேசிய செய்திகள்

பாஜக எம்எல்ஏவின் தாய்க்கு இந்த நிலைமையா…? கொள்ளையர்களின் கொடூர செயல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

பிஹார் பகுதியில் மூதாட்டியிடம் கம்மலுக்காக காதை அறுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதாப் பிஹார் பகுதியில் காலையில் நடை பயிற்சிக்கு சென்ற 70 வயது மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியை காட்டி வழிமறைத்து கம்மலை கழட்டித் தருமாறு கேட்டு இருக்கின்றார்கள். ஆனால் கம்மலை கழட்ட முடியாததால் கையில் இருந்த கத்தியை எடுத்து காதோடு அறுத்து சென்று இருக்கின்றார்கள். இந்த சம்பவம் பற்றி நடந்த வெள்ளிக்கிழமை அன்று குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும் ஞாயிற்றுக்கிழமை தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

புலந்த்ஷஹரின் சாதர் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரதீப் சௌதரியின் தாய் சந்தோஷ் தேவி. இவர் தனது இளைய மகன் ஜித் பால் சவுத்ரியுடன் பிரதாப் விஹார் பகுதியில் வசித்துக் கொண்டிருக்கிறார். இது பற்றி ஜீபால் பேசும்போது செப்டம்பர் 9ஆம் தேதி காலை நடை பயிற்சி சென்ற தனது தாயை இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியை காட்டி கம்மலை கழட்டி தருமாறு தெரிவித்திருக்கின்றார்கள். அதனை கழட்ட முடியாமல் போன காரணத்தினால் கத்தியை எடுத்து காதோடு அறுத்து சென்று இருக்கின்றார்கள். இந்த சூழலில் ரத்த வெள்ளத்தில் தவித்த எனது தாயாரை பார்த்த காவலர்கள் அவருக்கு முதலுதவி செய்யவோ குற்றவாளிகளை தேடவும் முடியாமல் இனி காலை நடை பயிற்சி வரக்கூடாது என அறிவுறுத்தி இருக்கின்றார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |