தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு மாநாடு படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து உருவான 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிக்க, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்காக சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ள நிலையில், படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். அவர் முதல் நாள் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கி விட்டு வர வேண்டும். ஏனெனில் கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்ச நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.