Categories
சினிமா

வெந்து தணிந்தது காடு ரிலீஸ்….. “நல்லா தூங்கிட்டு படம் பார்க்க வாங்க”….. கௌதம் மேனன் கோரிக்கை…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனால் ரசிகர்கள் இதனை விழா கோலமாக மாற்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதாவது, வெந்து தணிந்தது காடு படத்தை காலை 5 மணிக்கு பார்க்க வரும் ரசிகர்கள் இரவு நன்றாக தூங்கி விட்டு வரவும். ஏனென்றால் கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |