ராஜஸ்தான் மாநிலம் ஷாரு மாவட்டத்தில் வசித்து வந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தான் வசித்துவரும் பகுதிகளிலுள்ள பாம்புகளை அவர் லாவகமாக பிடித்து அருகிலுள்ள வனப் பகுதியில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியிலுள்ள ஒரு கடைக்குள் பாம்பு புகுந்ததாக வினோத் திவாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த அவர் கடைக்குள் இருந்த கோப்ராவகை பாம்பை லாவகமாக பிடித்து தான்கொண்டுவந்த பைக்குள் அடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத வகையில் அவரை பாம்பு கடித்துவிட்டது. இதன் காரணமாக அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல வினோத் நடந்து சென்றுள்ளார். எனினும் பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.