Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம்..!!

தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கும், நாளைக்கும் வானிலை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..

அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 3 மற்றும் சோலையாறு, பந்தலூர், ஹரிசன் எஸ்டேட் செருமுள்ளியில்  தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

 

Categories

Tech |