Categories
மாநில செய்திகள்

தமிழக சிறைத் துறையில் வேலை…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கலந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழக சிறை துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவித்துள்ளது.

இந்த தேர்வு டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு, பிற்பகல் தமிழ் தகுதி தேர்வு மற்றும் பொது பாட தேர்வு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 13ஆம் தேதி கடைசி நாளாகும். மொத்தம் 680 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இது குறித்த மேலும் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |